2025 மே 04, ஞாயிற்றுக்கிழமை

கடல் அலையில் அடித்துச் செல்லப்பட்ட ஒருவரின் சடலம் மீட்பு

Princiya Dixci   / 2020 நவம்பர் 29 , பி.ப. 10:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.றொசாந்த் 

காங்கேசன்துறை கடலில் குளித்த இருவர் அலையில் அடித்துச் சென்ற நிலையில், ஒருவரின் சடலம் கரையொதுங்கியுள்ளதாக தெரிவித்த பொலிஸார், மற்றையவர் தொடர்பில் தகவல் கிடைக்கவில்லை என்றனர். 

காங்கேசன்துறை தல்செவன இராணுவ நட்சத்திர விடுதிக்கு அருகாமையில் இன்று (29) பிற்பகல் ஒரு மணியளவில் கடலில் குளித்துக்கொண்டிருந்த இரண்டு பேர் அலையில் அடித்துச் செல்லப்பட்டனர்.

தையிட்டியைச் சேர்ந்த சிவச்சந்திரன் நிரோஜன் (வயது -19), மாசிலாமணி தவச்செல்வம் (வயது -19) என்ற இருவருமே கடலலையில் அடித்துச் செல்லப்பட்டனர்.

அவர்களில் சிவச்சந்திரன் நிரோஜன் என்பவர், இன்று மாலை 5 மணியளவில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார் என்று காங்கேசன்துறை பொலிஸார் தெரிவித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X