2025 ஜூலை 06, ஞாயிற்றுக்கிழமை

கடும் பாதுகாப்புக்கு மத்தியில் பாடசாலைகள் ஆரம்பம்

எம். றொசாந்த்   / 2019 மே 06 , பி.ப. 12:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

வடக்கில் கடும் பாதுகாப்புக்கு மத்தியில் இரண்டாம் தவணைப் பாடசாலை இன்று (06) ஆரம்பமாகியுள்ளது. எனினும் மாணவர்களின் வரவு குறைவாகவுள்ளதாக பாடசாலைகளின் தகவல்கள் தெரிவிக்கின்றன.

நாட்டில் உயிர்த்த ஞாயிறன்று இடம்பெற்ற குண்டுத் தாக்குதல்களையடுத்து இரண்டாம் தவணைப் பாடசாலைகள் ஆரம்பிப்பது பிற்போடப்பட்டிருந்தது. இதனையடுத்து பாடசாலைகளில் கடும் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இன்றையதினம் மீளவும் பாடசாலைகள் ஆரம்பிக்கப்பட்டிருக்கின்றன.

ஆனாலும் பாடசாலைக்குச் செல்லும் மாணவர்களின் புத்தகப்பைகள் பொலிஸார் மற்றும் இராணுவத்தினரால் சோதனைக்குட்படுத்தப்பட்ட பின்னரே மாணவர்கள் பாடசாலைக்குள் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .