Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 05, திங்கட்கிழமை
Niroshini / 2020 நவம்பர் 25 , பி.ப. 07:29 - 0 - {{hitsCtrl.values.hits}}
-என்.ராஜ்
கடந்த 24 மணிநேரத்தில், கடும் மழை, காற்றின் தாக்கத்தினால் யாழ். மாவட்டத்துக்குட்பட்ட 15 பிரதேச செயலாளர் பிரிவில், 83 குடும்பங்களைச் சேர்ந்த 297 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என, யாழ். மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு உதவி பணிப்பாளர் என் சூரியராஷ் தெரிவித்தார்
இது தொடர்பில் தொடர்ந்துரைத்த அவர், தற்போது நிலை கொண்டுள்ள தாழமுக்கத்தின் தாக்கத்தால், கடலானது மிகவும் கொந்தளிப்பாக காணப்படும் எனவும் 80-100 கிலோ மீற்றர் அளவில் காற்றுவீசும் எனவும் கூறினார்.
யாழ். மாவட்டத்தில் கடலுக்கு செல்பவர்கள் குறிப்பாக மீன்பிடித் தொழிலுக்கு செல்பவர்கள் கடலுக்குச் செல்வதைத் தவிர்த்தல் வேண்டும் எனவும் அத்தோடு கரையோரப் பகுதி மக்கள் மற்றும் கரையோரத்தை அண்டிய மக்கள் விழிப்பாக இருக்குமாறும், அவர் கேட்டுக்கொண்டார்.
'யாழ். மாவட்டத்தில் கணிசமான மழைவீழ்ச்சி கிடைக்க பெற்றிருகின்றது. எனினும், இதுவரையில் சூறாவளி பாதிப்பு எதுவும் ஏற்படவில்லை.
'மேலும் கடந்த 24 மணி நேரத்தில் கடும் மழை காற்றின் தாக்கத்தின் காரணமாக 80 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளன' எனவும், அவர் தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
9 hours ago
04 May 2025