2025 ஜூலை 13, ஞாயிற்றுக்கிழமை

‘கட்சி விளக்கம் கோரவில்லை’

எஸ்.றொசேரியன் லெம்பேட்   / 2017 ஒக்டோபர் 04 , பி.ப. 12:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

“எனது கட்சி என்னிடம் விளக்கம் எதனையும் கோரவில்லை என வட மாகாண சுகாதார அமைச்சர் ஜி. குணசீலன் தெரிவித்துள்ளார்.

அண்மையில் இடம்பெற்ற டெலோ அமைப்பின் தலைமைக் குழுக் கூட்டத்தில், கட்சியுடன் கலந்தாலோசிக்காது வட மாகாண சுகாதார அமைச்சராக, குணசீலன் பதவியேற்றுக் கொண்டமை தொடர்பாக குணசீலனிடம் விளக்கம் கோரியுள்ளதாக தகவல்கள் வெளியாகியிருந்தன.

இது தொடர்பாக குணசீலனிடம் வினவியபோது,

“அண்மையில் இடம்பெற்ற டெலோ அமைப்பின் தலைமைக் குழுக் கூட்டத்தில், எனக்கு எதிராக கட்சி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ஊடகங்கள் மூலமாகவும் கட்சியின் உறுப்பினர்கள் ஊடாகவும் அறிந்து கொண்டேன். ஆனால் இதுவரை என்னிடம் விளக்கம் கோரி கட்சி எழுத்து மூலமாக அறிவிக்கவில்லை. எனவே கட்சி இவ்விடயம் தொடர்பில் எழுத்து மூலமாக விளக்கம் கோரும் பட்சத்தில் எனது விளக்கத்தை தெரிவிக்க முடியும்” என அவர் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .