2025 மே 14, புதன்கிழமை

கட்டாக்காலி நாய்களைக் கட்டுப்படுத்த மாத இறுதியில் விசேட செயற்றிட்டம்

Editorial   / 2020 பெப்ரவரி 26 , பி.ப. 01:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.குகன்

யாழ்ப்பாணம் மாநகர சபைக்குட்பட்ட பகுதிகளில், கட்டாக்காலி நாய்களைக் கட்டுப்படுத்தும் விசேட செயற்றிட்டமொன்று, இந்த மாத இறுதியில் முன்னெடுக்கப்படவுள்ளது.

எனவே,  வீடுகளில் நாய்களை வளர்ப்போர், தங்களது நாய்களை, வீட்டு வளவினுள் வைத்திருத்தல் வேண்டுமெனவும், அவ்வாறு பிடிக்கப்பட்ட நாய்கள், கட்டாக்காலி நாய்கள் காப்பகத்துக்கு அனுப்பப்படுமெனவும், யாழ். மாநகர சபை அறிவித்துள்ளது.

அத்துடன், வீட்டு நாய்களுக்குத் தடுப்பூசி ஏற்றுவதை உறுதிப்படுத்திக் கொள்ளுமாறும், மாநகர சபை அறிவுறுத்தியுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .