2025 ஜூலை 02, புதன்கிழமை

‘கட்டுப்படுத்த நடவடிக்கை’

Editorial   / 2017 நவம்பர் 15 , பி.ப. 03:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நிர்ஷன் இராமானுஜன்  

வடக்கில் மலேரியா நுளம்புகளின் பெருக்கத்தைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் அதற்காக பயிற்றுவிக்கப்பட்ட அதிகாரிகள் உரிய திட்டங்களை முன்னெடுத்து வருவதாகவும், பிரதி சுகாதார அமைச்சர் பைசல் காசிம் தெரிவித்தார்.  

டக்ளஸ் தேவானந்தா எம்.பியின் கேள்விக்கு தொடர்ந்து பதிலளித்த பிரதி அமைச்சர், “நுளம்புகள் பெருகும் கிணறுகளை மூடிவிடுதல், குடம்பிகள் பெருகுவதைத் தடுக்கும் வகையில், மீன்களை உரிய இடங்களில் இடுதல் மற்றும் இரசாயனப் பதார்த்தங்களை இடுதல் போன்ற நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறோம்” என்றார்.  

“அத்துடன், விசேடமாகப் பயிற்சியளிக்கப்பட்ட அதிகாரிகளால் மக்களை விழிப்புணர்வடையச் செய்யும் திட்டங்களும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இந்த வகை நுளம்புகள் வேறு மாகாணங்களில் காணப்படவில்லை” என்று அவர் மேலும் தெரிவித்தார்.  


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .