2025 ஜூலை 22, செவ்வாய்க்கிழமை

‘கட்டுப்பாட்டுக்குள் சட்டவிரோத மண் அகழ்வு’

செல்வநாயகம் கபிலன்   / 2017 ஓகஸ்ட் 13 , மு.ப. 09:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

யாழ். வடமராட்சி கிழக்கினூடாக மேற்கொள்ளப்பட்டு வந்த சட்டவிரோத மண் கடத்தல் தற்போது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளதாக பருத்தித்துறை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பிரதம பொலிஸ் பரிசோதகர் பீ.ஆர் சமன் ஜெதிலக தெரிவித்தார்.

“மாவட்ட பிரதிப் பொலிஸ்மா அதிபரின் நேரடிக் கண்காணிப்பில், காங்கேசன்துறை சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் எம்.ஆர். றஞ்ஜித் மாசிங்கவின் வழிகாட்டுதலின் கீழ் வல்வெட்டித்துறை, நெல்லியடி, பலாலி பொலிஸ் நிலைய உத்தியோகத்தர்களை இணைத்து, வடமராட்சி பகுதிகளில் இரவு, பகல் நேர ரோந்துக் கடமையில் தற்போது மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேலதிக பாதுகாப்புத் தேவைக்காக, விசேட அதிரடிப் படையினரும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாக” சமன் ஜயதிலக தெரிவித்தார்.

“26 ஆண்டு யுத்த காலத்தின் போது யாழ். குடாநாட்டில் சட்டம், ஒழுங்கு சீர்குலைந்திருந்ததது. அக்காலப்பகுதியில் மண் கடத்தல்காரர்கள் எந்தவித தங்கு தடையின்றி கடத்தல் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தனர். தற்போது சட்டம், ஒழுங்கு நன்றாக பலப்படுத்தப்பட்டுள்ளது. இதனைக் கடைப்பிடிப்பதில் ஏற்பட்டுள்ள சிக்கல் நிலையே, கடந்த மாதம் வடமராட்சி பகுதியில் ஏற்பட்ட அசாதரண சம்பவத்திற்கு காரணம் என்று கூறமுடியும்.

“கடந்த மாதம் ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலையைத் தொடர்ந்து கலவரங்கள் மற்றும் அரச சொத்துக்கு சேதம் விளைவித்த குற்றச்சாட்டில், 26 பேர் வரையில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

மேலும், சட்டவிரோத மண் கடத்தல் நடவடிக்கைகளுக்கு பயண்படுத்தப்பட்ட லொறிகள் 16, மோட்டார் சைக்கிள்கள் 15, உழவு இயந்திரம் 1, கப் வாகனங்கள் 2 என்பன கைபெற்றப்பட்டுள்ளதாக” சமன் ஜயதிலக கூறினார்.

இந்நடவடிக்கைகள் சட்டதிட்ட நடவடிக்கைகள் மூலம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதனால் பிரதேசத்தில் இடம்பெற்று வந்த மண் கடத்தல் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. மேலும் வன்முறையில் ஈடுபட்ட சந்தேக நபர்கள் பலர் ஊரை விட்டுத் தலைமறைவாகியுள்ளதனால் அவர்களைக் கைது செய்வதற்குரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக” சமன் ஜயதிலக மேலும் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .