2025 செப்டெம்பர் 29, திங்கட்கிழமை

கணக்காளரை கடத்தி கணக்கில் கை வைத்த பெண்

Editorial   / 2023 ஜூலை 10 , பி.ப. 12:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

யாழ்ப்பாணம், நல்லூர் பகுதியைச் சேர்ந்த எழுபது வயதுடைய கணக்காளர் ஒருவரின் காணியை கொள்வனவு செய்ய வந்த பெண் உள்ளிட்ட குழுவினர், குறித்த கணக்காளரை வேனில் ஏற்றி வலுக்கட்டாயமாக கடத்திச் சென்று, அவருடைய வங்கிக் கணக்கில் இருந்த பணத்தை தனது வங்கிக்​கணக்கு மாற்றிக்கொண்ட பெண் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

தன்னுடைய வங்கிக் கணக்குக்கு ரூ.15 இலட்சம் மாற்றப்பட்டதை அடுத்து, அவரை அவ்விடத்திலேயே விட்டுவிட்டு, அப்பெண் தலைமையிலான குழுவினர் தலைமறைவாகிவிட்டனர் என்று  கோப்பாய் பொலிஸார் தெரிவித்தனர்.

இது தொடர்பில் கணக்காளர் கோப்பாய் பொலிஸாருக்கு அறிவித்துள்ளார். இந்தக் குழுவை வழிநடத்தியதாகக் கூறப்படும் பெண்ணை அடையாளம் கண்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

இந்தக் கணக்காளருக்குச் சொந்தமான காணி விற்பனைக்கு இருப்பதை அறிந்த பெண் உள்ளிட்ட குழுவினர் வேனில் வந்து இதனைச் செய்ததாகவும் பொலிஸார் குறிப்பிடுகின்றனர்.

குறித்த பெண் மற்றும் குழுவினரை கைது செய்வதற்கான விசாரணைகளை கோப்பாய் பொலிஸார் ஆரம்பித்துள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X