2025 செப்டெம்பர் 30, செவ்வாய்க்கிழமை

கணவனை வெட்டிய மனைவிக்குப் பிணை

George   / 2016 மே 10 , பி.ப. 07:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுப்பிரமணியம் பாஸ்கரன்

குடும்பத்தகராற்றின் போது கணவனை காட்டுக்கத்தியால் வெட்டி படுகாயமடையச் செய்த மனைவியை, தலா 75 ஆயிரம் ரூபாய் பெறுமதியான இரண்டு ஆட்பிணையில் செல்ல கிளிநொச்சி நீதிவான் நீதிமன்ற நீதிவான் ஏ.ஏ.ஆனந்தராசா, நேற்று செவ்வாய்க்கிழமை (10) உத்தரவிட்டார்.

உருத்திரபுரம், எள்ளுக்காடுப் பகுதியில் கணவன், மனைவி இருவருக்கு இடையில் திங்கட்கிழமை (09) தகராறு ஏற்பட்டு, அது கைகலப்பாக மாறியுள்ளது. 

இதன்போது ஆத்திரங்கொண்ட மனைவி, காட்டுக்கத்தியால் கணவனின் கழுத்து, தலை மற்றும் காது ஆகிய இடங்களில் வெட்டியுள்ளார்.

இதில் படுகாயமடைந்த 25 வயதுடைய கணவன், கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். 

விசாரணைகளை மேற்கொண்ட கிளிநொச்சி பொலிஸார் பெண்ணைக் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தினர்.

அவர்களுக்கு குழந்தையொன்று இருப்பதால், குழந்தையின் நன்மை கருதி பெண்ணை விளக்கமறியலில் வைக்காமல் பிணையில் செல்ல நீதிவான் அனுமதியளித்ததுடன், எதிர்வரும் 20ஆம் திகதிக்கு நீதிவான் வழக்கை ஒத்திவைத்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X