2025 மே 13, செவ்வாய்க்கிழமை

கதிர்காம கந்தன் ஆலயத்தை நோக்கிய பாத யாத்திரை ஆரம்பம்

எம். றொசாந்த்   / 2020 மே 28 , பி.ப. 08:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

யாழ்ப்பாணம் தொண்டமனாறு செல்வ சந்நிதி முருகன் ஆலயத்திலிருந்து கதிர்காம கந்தன் ஆலயத்தை நோக்கி பாத யாத்திரை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

செல்வசந்நிதி முருகன் ஆலயத்தில் இன்று (28) நடைபெற்ற விசேட பூஜை வழிபாடுகளைத் தொடர்ந்து, ஆலய கப்புறாளையால் யாத்திரைக்கு தலைமை தாங்கிச் செல்லவுள்ள அடியவரின் கையில் முருக பெருமானின் வேல் கையளிக்கப்பட்டது. 

வேலை பெற்றுக்கொண்ட அடியவர்கள், கதிர்காமம் நோக்கிய பாத யாத்திரையை ஆரம்பித்தனர். இந்த யாத்திரைக் குழுவினர், எதிர்வரும் 4ஆம் திகதி விசாகம், முல்லைத்தீவு வற்றாப்பளை அம்மன் ஆலயத்தில் நடைபெறும் விசேட பொங்கல் நிகழ்வில் கலந்து கொள்ளவுள்ளனர்.

பின்னர் அங்கிருந்து கதிர்காமம் நோக்கி பாத யாத்திரையாக சுமார் 46 நாள்கள் சென்று கதிர்காம கந்தனின் கொடியேற்ற தினத்தன்று ஆலயத்தை சென்றடையவுள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X