2025 செப்டெம்பர் 29, திங்கட்கிழமை

கந்தர்மடம் வாள்வெட்டு: ஐவர் கைது

George   / 2017 பெப்ரவரி 01 , மு.ப. 09:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.நிதர்ஸன், ரொமேஸ் மதுசங்க

நல்லூர், கந்தர்மடத்தில் உள்ள பலசரக்கு கடை மீது, பெற்றோல் குண்டு வீசி, கடையில் இருந்தவர்கள் மீது வாள் வெட்டுத் தாக்குதலில் ஈடுபட்டதாகக் கூறப்படும் ஐந்து பேரை, செவ்வாய்க்கிழமை  கைது செய்ததாக, யாழ்ப்பாணம் பொலிஸார் தெரிவித்தனர்.

அத்துடன், அவர்களிடமிருந்து, வாள்கள் 04, கைக்கோடரி 01, கூரிய ஆயுதமொன்று, மோட்டார் சைக்கிள் 01 என்பனவும், கைப்பற்றப்பட்டுள்ளன.

திங்கட்கிழமை இரவு மேற்கொள்ளப்பட்ட இந்தத் தாக்குதல் சம்பவத்தில் படுகாயடைந்த இருவர், யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த தாக்குதல் சம்பவம், அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சி.சி.டிவி கமெராவில் பதிவாகியிருந்தது. அதிலிருந்து பெறப்பட்ட காட்சிகள் மற்றும் பாதிக்கப்பட்டவர்கள் வழங்கிய வாக்குமூலத்தின் அடிப்படையிலேயே, சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுவரும் யாழ்ப்பாணம் பொலிஸார், சந்தேகநபர்களை நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X