2025 மே 15, வியாழக்கிழமை

கம்பெரலிய திட்டத்தில் ஊழல்; ‘ஆணைக்குழு அமைக்க நடவடிக்கை’

Editorial   / 2019 டிசெம்பர் 18 , பி.ப. 05:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.றொசாந்த்

 

நல்லாட்சிக் காலத்தில் முன்னெடுக்கப்பட்ட கம்பெரலிய வேலைத்திட்டத்தில் இடம்பெற்றதாகக் கூறப்படும் ஊழல்கள் தொடர்பான விசாரணைகளை முன்னெடுப்பதற்கு, ஆணைக்குழுவொன்றை அமைக்க, புதிய அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாக, நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் தெரிவித்தார்.

யாழ்ப்பாணம் மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுவின் அதிகார சபை அலுவலகத்தை, இன்று (18) திறந்துவைத்த பின்னர், ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும் போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அங்கு தொடர்ந்துரைத்த அவர், நல்லாட்சிக் காலத்தில் முன்னெடுக்கப்பட்ட அபிவிருத்தித் திட்டங்களை, இந்த அரசாங்கம் கைவிடாதெனவும் தேசிய அபிவிருத்திகளான பருத்தித்துறை துறைமுக அபிவிருத்தி, விமான நிலைய அபிவிருத்தி என்பன தொடர்ந்து முன்னெடுக்கப்படும் எனவும் கூறினார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .