2025 மே 04, ஞாயிற்றுக்கிழமை

கருவாடு பதனிடுவதற்காக நிதியுதவி வழங்கல்

Freelancer   / 2023 மார்ச் 29 , பி.ப. 03:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ்.றொசேரியன் லெம்பேட்

மன்னார்  மாவட்டத்தில் தெரிவுசெய்யப்பட்ட மீனவ பெண்கள் குழுக்களுக்கு, கருவாடு பதனிடுவதற்காக 50,000 ரூபாய் நிதியுதவி, மெசிடோ நிறுவனத்தால் நேற்று (28) மாலை வழங்கப்பட்டது.

சௌத்பார் மற்றும் ஓலைத்தொடுவாய் கிராமங்களைச் சேர்ந்த இரு மீனவப் பெண்கள் குழுக்களுக்கு இவ்வாறு கருவாடு பதனிடுவதற்காக தலா 50,000 ரூபாய் வீதம் வழங்கப்பட்டது.

இதன்போது கருவாடு பதனிடுதல் தொடர்பான திட்டமிடல் கருத்தமர்வு, மன்னார் மாவட்ட ஓய்வு பெற்ற முன்னாள் கடற்றொழில் பணிப்பாளர் மெராண்டாவினால் முன்னெடுக்கப்பட்டது.

மன்னார் சமூக, பொருளாதார மேம்பாட்டுக்கான நிறுவனப் பணிப்பாளர் ஜாட்சன் பிகிராடோ  மற்றும் பணியாளர்கள் இதில் கலந்துகொண்டிருந்தனர்.

மன்னார் மாவட்டத்தில் 7 மீனவப் பெண்கள் குழுக்களுக்கு இவ்வாறு உதவித் திட்டம் வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. (N)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X