2025 ஜூலை 26, சனிக்கிழமை

கரையொதுங்கிய ஆணின் சடலம் அடையாளம் காணப்பட்டது

Yuganthini   / 2017 ஜூலை 30 , பி.ப. 04:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ். நிதர்ஷன்

 

ஊர்காவற்றுறைக் கடற்பரப்பில், கடந்த 28ஆம் திகதி கரை ஒதுங்கிய ஆணின் சடலம், நேற்று  (29) அடையாளம் காணப்பட்டுள்ளது.

அடையாளம் காணப்பட்டவர், யாழ்ப்பாணம் - நாவாந்துறை பிரதேசத்தைச் சேர்ந்த ஆனந்தராசா யெயந்தன் (44 வயது) என, அவரது மனைவி யெயந்தன் திருச்செல்வி என்பவரால் அடையாளம் காணப்பட்டுள்ளார்.

இவர் மனநிலை பாதிக்கப்பட்டவர் என்றும், அதற்கு யாழ்ப்பாணம் வைத்தியாசாலையில் சிகிச்சை பெற்று வந்தவர் என்றும், அவரது மனைவி தெரிவித்துள்ளார்.

இதையடுத்து, மேற்கொண்ட மரணவிசாரனைகளின் போது, குறித்த நபர், கடல் நீரில் மூழ்கி இறந்ததாகக் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இதன்பின் உடலம், மனைவியிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

இச்சம்பவம் தொடர்பாக, ஊர்காவற்றுறைப் பொலிஸாரால், ஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு, எதிர்வரும் 8ஆம் திகதி, விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X