2025 மே 22, வியாழக்கிழமை

கர்ப்பிணி படு​கொலை; சந்தேகநபர்களுக்குப் பிணை

Editorial   / 2018 மே 16 , பி.ப. 04:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

- எம்.றொசாந்த், எஸ்.நிதர்ஷன்

ஊர்காவற்றுறை கர்ப்பிணிப் பெண் கொலை வழக்கில் சுமார் 17 மாதங்களாக விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த சந்தேகநபர்கள் இருவரையும் நிபந்தனையுடனான பிணையில் விடுவிக்க யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன் இன்று (16) உத்தரவிட்டார்.

ஊர்காவற்துறை பகுதியில் 2017 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 24 ஆம் திகதி ஒரு பிள்ளையின் தாயும் ஏழு மாத கர்ப்பிணியுமான ஞானசேகரன் ஹம்சிகா (வயது 27) என்பவர் கொலை செய்யபட்டார்.

கொலைச் சம்பவம் தொடர்பில் சகோதர்களான இருவர் அன்றைய தினம் மாலை மண்டைதீவு சந்தியில் வைத்து ஊர்காவற்றுறை பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர். 

அவர்கள் தொடர்ச்சியாக ஊர்காவற்றுறை நீதிவான் நீதிமன்றின் உத்தரவில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

சந்தேகநபர்களுக்கு பிணை கோரி அவர்களின் தாயார், சட்டத்தரணி ஊடாக யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றில் பிணை விண்ணப்பம் செய்தார்.

பிணை விண்ணப்பத்தை ஆராய்ந்த யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன், சந்தேகநபர்கள் இருவருக்கும் நிபந்தனையுடனான பிணை வழங்கி இன்று கட்டளை வழங்கினார்.

“சந்தேகநபர்கள் ஒவ்வொருவரும் 1 இலட்சம் ரூபாய் காசுப்பிணையிலும் தலா 5 இலட்சம் பெறுமதியான இரண்டு ஆட்பிணையிலும் செல்ல அனுமதியளித்த நீதிபதி, மாதத்தின் இறுதி ஞாயிற்றுக்கிழமையில் காலை 9 மணிக்கும் நண்பகல் 12 மணிக்கும் இடையில் ஊர்காவற்றுறை பொலிஸ் நிலையத்தில் கையொப்பமிட வேண்டும். வெளிநாடு செல்லத் தடை” என்று கட்டளை வழங்கினார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X