2025 ஒக்டோபர் 01, புதன்கிழமை

கறுப்புத்துணியால் முகத்தை மூடி வந்தவர்கள் மகனை கடத்தினர்

Gavitha   / 2016 பெப்ரவரி 27 , மு.ப. 07:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.றொசாந்த

'முகத்தை கறுப்பு துணியால் மறைத்துக் கொண்டு அதிகாலை 4.30 மணியளவில் வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்தவர்கள், மகனைக் கடத்திச் சென்றனர்' என்று யோகேஸ்வரன் நாகேஸ்வரி என்பவர் சாட்சியமளித்தார்.

காணாமற்போனோரை கண்டறியும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் அமர்வுகள், ஆணைக்குழுவின் தலைவர் மெக்ஸ்வெல் பரணகம தலைமையில் இன்று சனிக்கிழமை (27) கோப்பாய் பிரதேச செயலகத்தில் இடம்பெறுகின்றது.

இதில் கோப்பாய், பருத்தித்துறை, கரவெட்டி பிரதேசத்தைச்  சேர்ந்தவர்கள் கோப்பாய் பிரதேச செயலகத்தில் சாட்சியமளிக்கின்றனர்.

இதன்போதே உரும்பிராய் வடக்குப் பகுதியைச் சேர்ந்த நாகேஸ்வரி இவ்வாறு சாட்சியமளித்தார்.

'யோகேஸ்வரன் லோகிதாசன் ஆகிய எனது மகனை கடத்திச் செல்லும் போது அவருக்கு 17 வயது. 2007 ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் 16ஆம் திகதி மகன் கல்வி கற்றுக்கொண்டிருந்த போது,  அதிகாலை 4.30 மணியளவில் முகத்தை கறுப்பு துணியால் மறைத்து கொண்டு வீட்டுக்குள் அத்துமீறி உட்புகுந்தவர்கள் மகனைக் கடத்திச் சென்றனர்' என தாயார் சாட்சியமளித்தார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X