2025 செப்டெம்பர் 26, வெள்ளிக்கிழமை

கறி சட்டிக்குள் விழுந்தவர் உயிரிழப்பு

Niroshini   / 2021 மே 06 , பி.ப. 03:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.றொசாந்த்

 

உணவகத்தில் சமையலில் ஈடுபட்டிருந்த நிலையில் கறி சட்டிக்குள் தவறி விழுந்தவர், சிகிச்சை பலனின்றி, நேற்று (05) உயிரிழந்துள்ளார்.

அல்வாய் வடக்கைச் சேர்ந்த இராசையா தீபனகுமார் (வயது 41) என்பவரே, இவ்வாறு உயிரிழந்தவர் ஆவார்.

பருத்தித்துறை மந்திகை பகுதியில் உள்ள உணவகம் ஒன்றில் சமையலாளராகப் பணிபுரியும் குறித்த நபர், கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று (02), சமையலில் ஈடுபட்டிருந்த நிலையில், அவருக்கு தி​டீரென வலிப்பு ஏற்பட்டு, கறி சட்டிக்குள் தவறி விழுந்துள்ளார்.

அதனையடுத்து அங்கிருந்த ஏனைய பணியாளர்கள் அவரை மீட்டு மந்திகை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டபோது, சிகிச்சை பலனின்றி நேற்று மாலை உயிரிழந்துள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .