2025 மே 14, புதன்கிழமை

கறுப்பு ஜூலை தினம் அனுஷ்டிப்பு

Editorial   / 2020 ஜூலை 23 , பி.ப. 12:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செந்தூரன் பிரதீபன்

வலிகாமம் கிழக்குப் பிரதேச சபையில் கறுப்பு ஜூலை நினைவேந்தல், இன்று (23) காலை அனுஷ்டிக்கப்பட்டது.

வலிகாமம் கிழக்கு பிரதேச சபை வளாகத்தில் தவிசாளர் தியாகராஜா நிரோஷ் தலைமையில், சபையின் உறுப்பினர்கள், உத்தியோகத்தர்கள் ஒன்றுகூடினர்.

அஞ்சலி செலுத்துவதற்கான பொது ஈகைச்சுடர் தவிசாளரினால் ஏற்றப்பட்டதுடன், பிரதேச சபையின் உறுப்பினர்கள் கைகளில் மெழுவர்த்தியை ஏந்தியவாறு அஞ்சலித்தனர்.

தொடர்ந்து இனியொரு கறுப்பு ஜூலை வேண்டாம், இனவாதம் அரச இயந்திரம் முதல் சிவில் சமூகங்கள் வரையில் முற்றாக ஒழிக்கப்படவேண்டும் என்ற தொனிப்பொருளில் தவிசாளர் மற்றும் உறுப்பினர்கள் உரைகள் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X