Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
சுப்பிரமணியம் பாஸ்கரன் / 2017 ஜூலை 21 , மு.ப. 11:16 - 0 - {{hitsCtrl.values.hits}}
சுப்பிரமணியம் பாஸ்கரன்
தற்காலிக கொட்டகைகளில் கல்விகற்று வரும் தமக்கு, கற்றல் சூழலை ஏற்படுத்தி தருமாறு கிளிநொச்சி கனகாம்பிகை பாடசாலை மாணவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இன்னும் சில மாதங்களில், பருவமழை ஆரம்பிக்கவுள்ளமையால் அதற்கு முன்னர் தமது கொட்டகைகளை திருத்தி தருமாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.
கிளிநொச்சி கனகாம்பிகைகுளம் பாடசாலையில் போதிய வகுப்பறை கட்டடம் இன்மையால், தற்காலிககொட்டகை ஒன்றில் தரம் ஒன்பது முதல் பதினொன்று வரையான மாணவர்கள் தங்களின் கல்விச் செயற்பாடுகளை மேற்கொண்டு வருகின்றனர்.
குறித்த கொட்டகை பெருமளவு சேதமுற்று காணப்படுகிறது. குறிப்பாக கூரை பெரிதும் சேதமுற்ற நிலையில் தற்போது சூரியனின் நகர்வுக்கு ஏற்ப இருக்கைகளை நகர்த்தி நகர்த்தி இருந்தே கற்றல் செயற்பாடுகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இதனால், மாணவர்கள் சீராக கற்றல் செயற்பாடுகளை முன்னெடுக்க முடியாதுள்ளது. எனவே, குறித்த கொட்டகையில் கல்வி கற்கும் மாணவர்கள் தங்களுக்கு நிரந்தர வகுப்பறை கட்டடம் ஒன்றை அமைத்து தருமாறும் அதற்கு முன்னதாக பருவ மழை ஆரம்பிப்பதற்கு முன் இந்த கொட்டகையின் கூரையை வேய்ந்து தருமாறும் மாணவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
5 hours ago
7 hours ago
7 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
7 hours ago
7 hours ago
7 hours ago