2025 ஜூலை 23, புதன்கிழமை

கல்வி அமைச்சின் தந்திரோபாயத் திட்டம்

George   / 2015 டிசெம்பர் 18 , மு.ப. 05:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.ஜெகநாதன்

வடமாகாண கல்வி அமைச்சால் எதிர்வரும் 5 வருடங்களுக்கு தந்திரோபாயத் திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக வடமாகாணக் கல்வி அமைச்சர் தம்பிராசா குருகுலராஜா தெரிவித்தார்.

வடமாகாண சபையின் 2016ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டத்தின் கல்வி அமைச்சுக்கு ஒதுக்கப்பட்ட நிதி தொடர்பான விவாதம், கைதடியில் அமைந்துள்ள வடமாகாண சபையில் வியாழக்கிழமை (17) நடைபெற்றபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார். 

'வடமாகாண மக்களுக்கான கல்விச் சேவை வழங்கலை மேலும் மேம்படுத்தும் பொருட்டு இந்த தந்திரோபாயத் திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படவுள்ளன.

அதாவது, மனிதவள அபிவிருத்தி, க.பொ.த உயர்தரத்தில் விஞ்ஞானப் பிரிவில் கற்கும் மாணவர்களின் எண்ணிக்கையை 40 வீதமாக உயர்த்துதல், தரமான தரவு வழங்கலை மேம்படுத்தல், தரமான கல்வி மாணவர்களுக்கு வழங்குவதை உறுதிப்படுத்தல், மாணவர்களுக்கு கற்றலுக்கு தேவையான உட்கட்டமைப்பு வசதிகளை வழங்கல், பின்தங்கிய இடங்களில் கடமையாற்றும் ஆசிரியர்களுக்கான இருப்பிட வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்தல், விசேட தேவைகளுடைய மாணவர்களுக்கான உபகரணங்களைப் பெற்றுக்கொடுத்தலும், விசேட கல்வித் தேவைகளை நிறைவேற்றலும், அண்மையிலுள்ள பாடசாலை நல்ல பாடசாலை என்ற மத்திய அரசின் கொள்கையை அமுல்;படுத்தல் ஆகிய தந்திரோபாய திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படவுள்ளன' என்றார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .