2025 மே 15, வியாழக்கிழமை

’கலாசார மத்திய நிலையம் அமைக்கப்படுவது யாழுக்குப் பெருமை’

Editorial   / 2019 டிசெம்பர் 22 , பி.ப. 05:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.நிதர்ஷன்

இந்திய அரசாங்கத்தின் உதவியுடன் கலாசார மத்திய நிலையம் யாழில் அமைக்கப்படுவது யாழ்ப்பாணத்துக்கு பெரிய பெருமை எனத் தெரிவித்துள்ள சமுதாய வலுவூட்டல்கள் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான், அதற்காக இந்திய அரசாங்கத்துகு இலங்கை அரசாங்கமும் யாழப்பாண மக்களும் நன்றி தெரிவிக்க வேண்டுமென்றும் கூறினார்.

யாழ்ப்பாணத்துக்கு இரண்டு நாள்கள் விஐயமொன்றை மேற்கொண்டிருந்த அமைச்சர், பல இடங்களுக்கும் சென்று பல்வெறு தரப்பினர்களைச் சந்தித்துக் கலந்துரையாடியிருந்தார்.

இதன் தொடராக, இன்று காலை யாழ் நகரில் இந்திய அரசாங்கத்தின் உதவுடன் அமைக்கப்பட்டு வருகின்ற கலாசார நிலையத்தைப் பார்வையிட்ட பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலையே, அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இதன்போது, அவர் மேலும் தெரிவித்ததாவது,

“இந்திய அரசாங்கம், பல்வேறு உதவிகளை வழங்கி வருகின்றது. அதற்கமைய இந்த கலாசார மத்திய நிலையம் அமைப்பதற்கும் பாரிய உதவிகளைச் செய்துள்ளது. மிகப் பிரமாண்டமாக இந்த கலாசார நிலையம் இங்கு அமைக்கப்படுவது யாழ்ப்பாணத்திற்கு மிகவும் பெருமை.

“ஆகையினால் இந்திய அரசிற்கு இலங்கை அரசாங்கமும் யாழ்ப்பாண மக்களும் நன்றிகளைத் தெரிவிக்க வேண்டும். அதே நேரத்தில் இந்த காலாசார நிலையத்தை எவ்வாறு பாராமரிக்கப் போகின்றோம் என்பதே பிரச்சினை. ஆகையினால், இது தொடர்பில் கலந்துரையாடி உரிய முடிவுகளை எடுத்துச் செயற்பட வேண்டும்” என்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .