2025 டிசெம்பர் 15, திங்கட்கிழமை

கலைப் பீடத்தில் தகவல் தொழில்நுட்பத் துறைக்கு அனுமதி

Princiya Dixci   / 2020 நவம்பர் 26 , பி.ப. 07:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

நிதர்ஷன் வினோத்

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் புதிதாகத் தகவல் தொழில்நுட்பத் துறையை அமைப்பதற்கு, பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு அங்கிகாரம் வழங்கியுள்ளது. 

அதனடிப்படையில், கலைப்பீடத்தில் தகவல் தொழில்நுட்பத் துறையை அமைப்பதற்கான பூர்வாங்க வேலைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதுடன், 2021ஆம் ஆண்டு முதல் கலைப்பீட மாணவர்கள் தகவல் தொழில்நுட்பத் துறையில் கற்கைகளைத்  தொடரமுடியும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.  

அனைத்துப் பல்கலைக்கழகங்களிலும், கலைப்பீட மாணவர்களின் தகவல் தொழில்நுட்ப அறிவு மற்றும் திறன்களை அதிகரிக்கும் நோக்குடன், கலைப் பட்டதாரிகளின் வேலைவாய்ப்புச் சந்தர்ப்பத்தை அதிகரிக்கும் செயற்றிட்டத்தை பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு 2019ஆம் ஆண்டு ஆரம்பித்திருந்தது. 

இக்கருத்திட்டத்தின் பிரதான நோக்கம், தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்ப அறிவு, அது தொடர்பான திறன்கள் ஆகியவற்றை மாணவர்களுக்கு வழங்குவதன் மூலம் வேலைவாய்ப்புச் சந்தர்ப்பத்தை இலகுவில் பெறக்கூடிய முறையில் மாற்றுதலாகும்.

இந்தப் பிரிவு ஸ்தாபிக்கப்பட்டதுடன், மாணவர்கள் தமது பட்டக்கல்வியை கற்கும் அதே காலப்பகுதியில், தகவல் தொழில்நுட்பத்தில் சாதாரண சான்றிதழையும், டிப்ளோமா சான்றிதழையும் பெற்றுக் கொள்ள முடியும் எனவும் கொழும்பு பல்கலைக்கழக கணினித் துறை தயாரித்த பாடத்திட்டத்துக் கமைவாக பாடநெறிகள் நடத்தப்படும் என்றும், துணைவேந்தர் ஊடகப்பிரிவு செய்தி வெளியிட்டுள்ளது. 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .