2025 ஓகஸ்ட் 30, சனிக்கிழமை

‘கள் இறக்க தடையில்லை’

Editorial   / 2017 ஒக்டோபர் 31 , பி.ப. 11:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.றொசாந்த்

திருத்தப்பட்ட மதுவரித் திணைக்களச் சட்டத்தின் பிரகாரம், கித்துள் மரத்தில் இருந்து கள் இறக்குவதற்கு அனுமதி பெறப்பட தேவையில்லை என்பதே அமுலுக்கு வரவுள்ளதென, வடமாகாண எதிர்க்கட்சித் தலைவர் சி.தவராசா தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில், அவர் தனது பேஸ்புக் பக்கத்தில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

“நாடாளுமன்றத்தில் பிரஸ்தாபிக்கப்படவிருக்கின்ற மதுவரித் திணைக்களச் சட்டமூலத்துக்கான ஒரு மாற்றம் தொடர்பான வர்த்தமானி அறிவித்தலை அடிப்படையாகக் கொண்டே, பிழையான தகவல்கள் பரப்பப்பட்டுக் கொண்டிருக்கின்றன.

“ஏற்கெனவே உள்ள மதுவரித் திணைக்களச் சட்டத்தின் படி, மதுவரித் திணைக்கள அனுமதி இல்லாமல், எந்த மரத்திலிருந்தும் கள்ளிறக்க முடியாது. இப்போது வரவிருக்கும் திருத்தத்தில், அச்சொற்றொடருக்குப் பதிலாக ‘கித்துள்’ மரத்தைத் தவிர எந்த மரத்தில் இருந்தும் கள் இறக்க முடியாது.

“இதை இன்னொரு வகையாகக் கூறுவதாயின், இதுவரை எந்த மரத்திலிருந்தும் (உ-ம்: தென்னை, பனை) கள் இறக்குவதற்கு, மது வரித் திணைக்களத்திடம் இருந்து அனுமதி பெறப்படல் வேண்டும் என்பதேயாகும்.

“இச்சட்டமூலத்தின் மூலம், கித்துள் மரத்திலிருந்து கள் பெறப்படுவதற்கு மது வரித்திணைக்களத்திடம் இருந்து அனுமதி பெறப்படத் தேவையில்லை. இதற்காக ஜனாதிபதியிடமோ, பிரதமரிடமோ, நிதி அமைச்சரிடமோ முறையிடத் தேவையில்லை” எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .