2025 டிசெம்பர் 22, திங்கட்கிழமை

‘கழிவகற்றல் தொடர்பில் பொய்யான செய்தி வெளியிடப்பட்டுள்ளது’

எம். றொசாந்த்   / 2018 ஏப்ரல் 23 , பி.ப. 06:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

யாழ்ப்பாணம் மாநகரின் திண்மக் கழிவகற்றல் பணிகளை தென்னிலங்கை தனியார் நிறுவனத்திடம் வழங்கவுள்ளதாக வெளியான செய்தியை யாழ்ப்பாணம் மாநகர மேயர் இமானுவேல் ஆர்னொல்ட் நிராகரித்துள்ளார்.

யாழ்.மாநகர சபையில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனை தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

“ஈபிடிபியுடன் ஆதரவோடு யாழ்ப்பாண மாநகர சபையில் ஆட்சியமைத்த தமிழ் தேசியக் கூட்டமைப்பு, யாழ். மாநகரை எழில்மிக்க மாநகராக்குவோம் என்று கூறிக் கொண்டு, இங்குள்ள ஊழியர்கள் வெளியாட்கள் செய்வதைப் போன்று செய்யமாட்டார்கள் என்பதுக்காக சிங்கள ஊழியர்களை வேலைக்கு அமர்த்த உள்ளனர்” என பத்திரிகை ஒன்றில் செய்தி வெளியாகியிருந்தது.

இந்தச் செய்தி எனக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. இவ்வாறான கலந்துரையாடல்கள் எனது மட்டத்தில் இடம்பெற்றிருக்கவில்லை. அத்துடன், இந்தச் செய்தி தொழிலாளர் தொழிற்சங்கத்தின் ஊடாக வழங்கப்படவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதுதொடர்பில் அவர்கள் மறுப்பை வெளியிடுவதாகத் தெரிவித்துள்ளனர்.

நான் பதவியேற்ற நாள் முதல் சுகாதாரத் தொழிலாளர்களுடன் சிறந்த உறவுகளைப் பேணி வருகின்றேன். அவர்களின் தொழில் சார்ந்த விடயங்கள், அவர்களை எவ்வாறு அடுத்த கட்டத்துக்குக் கொண்டு செல்வது, அவர்களை தொழில்சார் ரீதியாக எவ்வாறு மாற்றியமைக்க முடியும் உள்ளிட்ட விடயங்களில் அக்கறை செலுத்தி வருகின்றேன்.

தற்போது கடமையாற்றும் சுகாதாரத் தொழிலாளிகள் அனைவரும் எமது ஆட்சிக் காலம் நிறைவடையும் போது, வளர்த்தவர்களாக தோற்றமளிப்பீர்கள் என்ற உறுதிமொழியை தொழிற்சங்கத்துக்கு வழங்கியுள்ளேன்” என மேலும் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X