2025 ஒக்டோபர் 01, புதன்கிழமை

கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம்

Niroshini   / 2016 மார்ச் 09 , மு.ப. 06:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சொர்ணகுமார் சொரூபன்

'பெண்கள், சிறுவர்களுக்கு எதிரான வன்முறைகளை ஒழிக்க வேண்டும்' எனும் தொனிப்பொருளில், திருகோணமலை மாவட்ட பெண்கள் வலையமைப்பு மற்றும் யாழ்.மாவட்டத்தின் நீதிக்கும் சமாதானத்துக்குமான பணிமனை ஆகியன இணைந்து ஏற்பாடு செய்த  கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டமொன்று, வடமாகாண முதலமைச்சர் அலுவலகம் முன்பாக இன்று புதன்கிழமை (09) முன்னெடுக்கப்பட்டது.

'பெண்கள், சிறுவர்கள் மீதான வன்கொடுமைகள் தொடர்பில் சிறப்பு நீதிமன்றம் அமைக்கப்பட்டு, விசாரணை செய்யப்படவேண்டும், பெண்கள், சிறுவர்கள் மீதான வன்கொடுமைகளில் ஈடுபடுகின்ற குற்றவாளிகளுக்கு பிணை வழங்கக்கூடாது, குற்றவாளிகளின் மரபணு சோதனை அறிக்கை ஒரு மாதகால காலத்துக்குள் சமர்ப்பிக்க வேண்டும், வன்கொடுமைகளுக்கு எதிராக புதிய சட்டத்திட்டங்கள் கொண்டு வரப்பட வேண்டும், ஈடுபடுபவர்களுக்கு மரண தண்டனையைவிட உச்ச தண்டனை வழங்கப்பட வேண்டும்' ஆகிய கோசங்களை எழுப்பியவாறு ஆர்ப்பாட்டக்காரர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இறுதியில் ஆர்ப்பாட்டக்காரர்கள் வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனிடம் மகஜர் ஒன்றையும் கையளித்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X