Editorial / 2020 ஜூன் 17 , பி.ப. 07:10 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எஸ்.நிதர்ஷன்
வடமராட்சி கிழக்கு - மணற்காட்டு பகுதியில், மணல் அகழ்வதற்கு உள்ளூர் பாரவூர்தி உரிமையாளர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டதைக் கண்டித்து, உள்ளூர் பாரவூர்த்தி உரிமையாளர்களால், இன்று (17) காலை கவனயீர்ப்புப் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.
மணற்காட்டுப் பகுதியில், உள்ளூர் பாரவூர்தி உரிமையாளர்களுக்கு மணல் அகழ்வதற்கு அனுமதி வழங்கப்பட்டிருந்த நிலையில், அவர்களில் 40க்கும் மேற்பட்ட பாரவூர்திகளுக்கு திடீரென மணல் அகழ்வதற்கான அனுமதி மறுக்கப்பட்டது.
மேலும், பாரவூர்தி சங்கத்தின் சில வாகனங்களுக்கு, அரசியல் கட்சி சார்பாக மணல் அகழ்வதற்கு அனுமதி வழங்கப்பட்டது. இதற்கு எதிர்ப்புத் தெரிவித்தே, இந்தகக் கவனயீர்ப்புப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
4 hours ago
4 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
4 hours ago
5 hours ago