2025 செப்டெம்பர் 26, வெள்ளிக்கிழமை

காணாமற்போன முதியவர் சடலமாக மீட்பு

Editorial   / 2018 ஜூன் 27 , பி.ப. 04:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நடராசா கிருஸ்ணகுமார்

முல்லைத்தீவு – புத்துவெட்டுவானில், கடந்த 23ஆம் திகதி காணாமற்போன முதியவர், இன்று (27) காலை சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

புத்துவெட்டுவான் – சுடலைப் பகுதியில் வைத்தே, குறித்த முதியவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

வீரகத்தி சோமசுந்தரம் (வயது 81) என்ற முதியவரே, இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

கடந்த 23ஆம் திகதி அதிகாலையில் இருந்து, குறித்த முதியவரைக் காணவில்லை என, ஐயன்கன்குளம் பொலிஸாரிடம் முறைப்பாடு தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து, இராணுவத்தினரும் பொதுமக்களும் இணைந்து நடத்திய தேடுதல் நடவடிக்கையின்போதே, குறித்த முதியவரின் சடலம், இன்று மீட்கப்பட்டது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .