Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2017 நவம்பர் 29 , பி.ப. 05:19 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எம்.றொசாந்த், டி.விஜித்தா
காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பில் காத்திரமான நடவடிக்கை எடுக்க, கனேடிய அரசாங்கம், இலங்கைக்கு அழுத்தங்களை வழங்கவேண்டும்” என, இலங்கைக்கான கனேடியத் தூதுவரிடம் வலியுறுத்தியதாக, யாழ்ப்பாண மறைமாவட்ட ஆயர் கலாநிதி ஜஸ்ரின் ஞானப்பிரகாசம் ஆண்டகை தெரிவித்தார்.
யாழ்ப்பாணத்துக்கான விஜயத்தை மேற்கொண்டுள்ள கனேடியத் தூதுவர் டேவிட் மைக்கின்ணன், யாழ்ப்பாண ஆயரை அவரது இல்லத்தில் இன்று (29) காலை சந்தித்தார்.
இதன்போது, “போர் இடம்பெற்ற காலப்பகுதியிலும் போர் நிறைவுக்கு வந்த பின்னரும், தமிழர்கள் காணாமல் ஆக்கப்பட்டனர். அவர்களைத் தேடி உறவுகள் சொல்லணாத் துன்பங்களை அனுபவிக்கின்றனர். அவர்களுக்கு உரிய பதிலை, இலங்கை அரசாங்கம் இன்னும் வழங்கவில்லை. காணாமல் ஆக்கப்பட்டோர் விவகாரத்தை இழுத்தடிக்காமல், காத்திரமான நடவடிக்கை எடுக்க இலங்கை அரசாங்கத்துக்கு கனடா உரிய அழுத்தத்தை வழங்கவேண்டும்” என, தான் வலியுறுத்தியதாக, ஆயர் கூறினார்.
அத்துடன், “யாழ்ப்பாணத்தில் பட்டதாரிகள் உள்ளிட்ட 50 ஆயிரத்துக்கு மேற்பட்ட இளையோர், வேலைவாய்ப்புக்காகக் காத்திருக்கின்றனர். அவர்களுக்கு வேலைவாய்ப்பை வழங்கக்கூடிய வகையில், கனடா அரசாங்கத்தினால் யாழ்ப்பாணத்தில் முதலீடுகள் செய்யப்படல் வேண்டும்” என்றும் தான் வலியுறுத்தியதாக, ஆயர் குறிப்பிட்டார்.
இதற்குப் பதிலளித்த கனேடியத் தூதுவர், “தமிழ் மக்களின் பிரச்சினைகள் தொடர்பில், இலங்கைக்கு நேரடியாகவும் ஐ.நா ஊடாகவும் தாம் அழுத்தங்களை வழங்கிறோம். தமிழ் மக்களின் விடயத்தில், கனடா தொடர்ந்தும் கரிசனையுடன் செயற்படும்” எனக் குறிப்பிட்டதாக, ஆயர் குறிப்பிட்டார்.
7 hours ago
8 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
8 hours ago
9 hours ago