2025 ஓகஸ்ட் 30, சனிக்கிழமை

காணாமல்போன இந்திய மீனவர் சடலமாக மீட்பு

Niroshini   / 2021 ஒக்டோபர் 20 , பி.ப. 01:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

 -செந்தூரன் பிரதீபன்

நேற்று  (19), கடற்படையினரின் படகு மோதி கடலில் மூழ்கி காணாமல் போன மீனவர், சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக, ஊர்காவற்றுறை பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த மீனவரின் சடலம், காரைநகர் - கோவளம் கடலில்  இருந்து, இன்று (20) மீட்கப்பட்டுள்ளதாகவும், பொலிஸார் தெரிவித்தனர்.

இவ்வாறு உயிரிழந்தவர், புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினம் பகுதியைச் சேர்ந்த ராசு ரஜிகரன் (வயது 27) என்பவர் ஆவார்.

குறித்த மீனவரின் சடலம், தற்போது காங்கேசன்துறை கடற்படை முகாமுக்கு எடுத்து வரப்பட்டுள்ளது.

ஏற்கெனவே கடற்படையின் படகுடன் மோதிய இந்திய மீனவர் படகிலிருந்து கைது செய்யப்பட்ட  இரண்டு இந்திய மீனவர்களும், மேலதிக சட்ட நடிவடிக்காக ஊர்காவற்றுறை பொலிஸ் நிலையத்தில், நேற்று மாலை ஒப்படைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.     


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .