2025 மே 04, ஞாயிற்றுக்கிழமை

காணி சுவீகரிப்புக்கு மக்கள் எதிர்ப்பு

Freelancer   / 2023 ஏப்ரல் 05 , மு.ப. 02:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

செந்தூரன் பிரதீபன்

ஊர்காவற்றுறை, தம்பாட்டி பகுதியில் கடற்படையினர் தமது முகாமுக்காக காணி அளவீட்டை மேற்கொள்ள முயன்றபோது பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

காணி அளவீடு செய்வதற்கு நில அளவை உத்தியோகத்தர்கள் நேற்று வருகை தந்திருந்த பொழுது, எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.

இதனால் குறித்த பகுதியில் பதட்டமான சூழ்நிலை உருவாகியது. சம்பவ இடத்துக்கு வந்த ஊர்காவற்றுறை பொலிஸார் நிலமையை கட்டுப்பாட்டில் கொண்டுவர முயன்றனர்.

மக்கள் குறித்த பகுதியில் தொடர்ந்து தமது எதிர்ப்பை வெளிப்படுத்தியதுடன் நில அளவையாளர்களை திரும்பிச் செல்லுமாறு வேண்டுகோள் விடுத்தனர். R


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X