2025 மே 05, திங்கட்கிழமை

’காணி சுவீகரிப்பை ஏற்கமுடியாது’

Niroshini   / 2020 நவம்பர் 11 , பி.ப. 03:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.நிதர்ஷன்

தமிழ் மக்களுக்குச் சொந்தமான காணிகளை அரசாங்கம் சுவீகரிக்கும் முயற்சியை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாதெனத் தெரிவித்துள்ள தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான செல்வராசா கஜேந்திரன், ஏற்கெனவே படையினர் ஆக்கிரமித்துள்ள காணிகளை மீள மக்களிடம் கையளிக்க வேண்டுமென்றும் கோரியுள்ளார்.

யாழ்ப்பாணம் - வேலணை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட மண்டைதீவு J-7 கிராம சேவகர் பிரிவிலுள்ள தனியாருக்குச் சொந்தமான காணியை கடற்படையினருக்காக சுவீகரிக்கும் முயற்சிக்கு, நேற்று (10) எதிர்ப்புத் தெரிவித்து முன்னெடுக்கப்பட்ட கவனயீர்ப்புப் போராட்டத்தில் கலந்துகொண்டு ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும் பொதே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அங்கு தொடர்ந்துரைத்த அவர், படையினரின் தேவைக்காக அல்லது வேறு ஏதோவொரு காரணங்களுக்காக பெறுமதி மிக்க காணிகளை ஆக்கிரமிப்பதற்கு அரசாங்கம் முனைப்புக் காட்டி வருகின்றதெனச் சாடினார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X