2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

’காணி சுவீகரிப்பை தடுப்பதற்கு பேச்சுவார்த்தை’

Editorial   / 2019 மார்ச் 21 , பி.ப. 06:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம். றொசாந்த்

காங்கேசன்துறை 'தலசெவன' இராணுவ விடுதி மற்றும் அதனைச் சுற்றியுள்ள 30 ஏக்கர் நிலம் இராணுவத்தால் சுவீகரிக்கப்படுவதைத் தடுத்து நிறுத்துமாறு, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என, நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா தெரிவித்தார்.

இந்த விடயம் தொடர்பில், பேச்சுவார்த்தை நடத்த ஜனாதிபதியை  அடுத்த வாரம் சந்திக்கவுள்ளதாகவும், அவர் கூறினார்.

வலிகாமம் வடக்கு, காங்கேசன்துறை தலசெவன இராணுவ விடுதியை மையமாகக் கொண்டு, அவ்விடுதியைச் சுற்றியுள்ள 30 ஏக்கர் நிலத்தை, இராணுவ நிர்வாகத்தினது சுற்றுலாப் பயன்பாட்டுக்காக சுவீகரிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இந்த நடவடிக்கையை நிறுத்தும் முகமாகவே, ஜனாதிபதி, பிரதமர், காணியமைச்சுடன் பேச்சுவார்த்தை நடத்தவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .