2025 மே 05, திங்கட்கிழமை

காணி வழங்கும் திட்டம்: ’தமிழர்களுக்கு விழிப்புணர்வு இல்லை’

Niroshini   / 2020 நவம்பர் 15 , பி.ப. 03:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

-என்.ராஜ், எஸ்.நிதர்ஷன்

அரசாங்கத்தால், தொழில் முனைவோருக்கு காணி வழங்கும் வேலைத்திட்டம் தொடர்பில், தமிழ் அரசியல்வாதிகள்  மக்களுக்கு விழிப்புணர்வூட்ட தவறிவிட்டார்கள என்று, தேசிய மீனவர் ஒத்துழைப்பு இயக்கத்தின் யாழ். மாவட்ட இணைப்பாளர் என். இன்பம் தெரிவித்தார்.

யாழ்ப்பாணத்தில், இன்று (15) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அங்கு தொடர்ந்துரைத்த அவர், குறித்த திட்டத்தின் முக்கியத்துவம் தொடர்பில் பொதுமக்களுக்கு போதிய விழிப்புணர்வின்மை காரணமாக, பல பொதுமக்கள் இந்த விடயம் தொடர்பில் கரிசனை செலுத்தவில்லை என்றார்.

ஒருசில அரசியல்வாதிகளைத் தவிர ஏனையவர்கள் குறித்த விடயம் தொடர்பில் பொது மக்களுக்கான விழிப்புணர்வை ஏற்படுத்த தவறிவிட்டார்களெனவும், அவர் சாடினார்.

எனவே, தமிழ் மக்களுக்கு இந்த காணி வழங்குவது தொடர்பான விழிப்புணர்வை அரசியல்வாதிகள் ஏற்படுத்தத் தவறினால், தமிழர் பகுதியில் உள்ள காணிகள் தென் இலங்கையைச் சேர்ந்தவர்களுக்கு சென்றடையும் அபாயம் உள்ளதாகவும், இன்பம் கூறினார்.

மேலும், நாடாளுமன்ற உறுப்பினர்கள் இந்த விடயத்தில் தலையிட்டு, இந்த வருட இறுதி வரை விண்ணப்பிக்க அரசாங்கத்திடம் காலநீடிப்பை கோர முயற்சிக்க வேண்டும் எனவும், அவர் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X