Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2017 ஜூலை 31 , மு.ப. 04:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எஸ்.நிதர்ஷன்
வலிகாமம் வடக்கு மற்றும் கேப்பாப்புலவு உள்ளிட்ட பகுதிகளில், படையினர் வசமுள்ள பொதுமக்களின் காணிகள் விடுவிப்புத’ தொடர்பில் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகத் தெரிவித்துள்ள புதிய இராணுவத் தளபதி மகேஷ் சேனநாயக்க, இவை குறித்து வெகுவிரைவில் நல்ல செய்திகள் கிடைக்கும் என்றும் முதலமைச்சரிடம் கூறியுள்ளார்.
இராணுவத் தளபதியாகப் பதவியேற்றதன் பின்னர், முதற்தடவையாக யாழ்ப்பாணத்துக்கு விஜயமொன்றை மேற்கொண்டுள்ள இராணுவத் தளபதி மேஜர் ஜெனரல் மகேஷ் சேனநாயக்க, நேற்று (30) காலை, யாழ். ஆரியகுளம் சந்தியில் அமைந்துள்ள நாகவிகாரைக்குச் சென்று, விசேட பூஜை வழிபாடுகளில் ஈடுபட்டார்.
இதனைத் தொடர்ந்து, வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரனின் வாசஸ்தலத்துக்குச் சென்று, முதலமைச்சர் விக்கினேஸ்வரனைச் சந்தித்து, பல்வேறு விடயங்கள் தொடர்பாகக் கலந்துரையாடினார். இதன்போதே இராணுவத் தளபதி இவ்வாறு தெரிவித்தார்.
இச்சந்திப்புத் தொடர்பாக முதலமைச்சர், ஊடகங்களுக்கு கருத்து வெளியிடுகையில்,
“யாழ்ப்பாண இராணுவத் தளபதியாக இருந்த மகேஷ் சேனநாயக்க, இரானுவத் தளபதியாகப் பதவியேற்றதன் பின்னர், என்னைச் சந்தித்துள்ளார். இது அவரின் உத்தியோகபூர்வ விஐயம் அல்ல. யாழ். வந்ததால் என்னைச் சந்தித்துக் கலந்துரையாடியிருக்கின்றார். இதன் போது, பல விடயங்கள் குறித்தும் பேசப்பட்டிருக்கின்றது.
“குறிப்பாக மயிலிட்டியை விடுவிப்பது குறித்துப் பேசியிருந்தேன். அதன் போது வெகு விரைவில் மயிலிட்டியை விடுவித்துத் தருவதாக, என்னிடம் கூறினார்.
“இதற்கமைய, தற்போது மயிலிட்டி விடுவிக்கப்பட்டிருப்பதையும் இதன் போது எடுத்துக் கூறியிருந்தார். மேலும், மயிலிட்டி விடுவிக்கப்பட்டாலும், அந்த மக்களின் பிரதான பாதையை இன்னமும் விடுவிக்கவில்லை என்றும், அதனால் மக்கள் பெரும் சிரமங்களை எதிர்நோக்கி வருவதனையும், இராணுவத் தளபதியிடம் நான் சுட்டிக்காட்டியிருந்தேன்.
“மேலும், வீதி விடுவிப்புத் தொடர்பில் பேசி உரிய நடவடிக்கையை எடுப்பதாகவும் தெரிவித்த இராணுவத் தளபதி, மயிலிட்டியை விடுவித்தது போன்று, இன்னும் பல இடங்கள் விடுவிப்பது குறித்தான செயற்பாடுகள் நடைபெறுவதாகவும் தெரிவித்திருந்தார்.
“இதேவேளை, இராணுவத்தினர் போர்க் காலத்தில் நடைபெற்றது போல் அல்லாமல், யுத்தமற்ற இன்றைய காலத்தில் இராணுவம் எவ்வாறு நடக்க வேண்டுமென்றும் குறிப்பாக மக்களுக்கு நன்மையளிக்கும் வகையில் நடக்க வேண்டும் என்றும் எடுத்துச் சொல்லி வருவதாகவும், சந்திப்பில் போது இராணுவத் தளபதி தெரிவித்திருந்தார்.
“மேலும், கேப்பாப்புலவு காணிகள் தொடர்பில் தற்போது கவனம் செலுத்தியுள்ளதாகவும், மீள்குடியேற்றம், புனர்வாழ்வு, மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சர் சுவாமிநாதன், அக்காணிகளில் இருந்த படையினர் வெளியெறுவதற்கு பணம் தருவதாகக் கூறியிருப்பதால், வெகு விரைவில் காணிகளை விட்டு, படையினர் விலகிச் செல்வார்கள் என்றும் தெரிவித்திருந்தார்.
“இதற்காக சில விவரங்களைக் கேட்டுள்ளதாகவும், விரரைவில் அது குறித்த நடவடிக்கை எடுக்க இருப்பதாகவும் தெரிவித்த இராணுவத் தளபதி, விரைவில் நல்ல செய்தி கிடைக்கும் என்ற வகையில் பேசியுள்ளார்” என, முதலமைச்சர் தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .