2025 ஓகஸ்ட் 25, திங்கட்கிழமை

காணிப்பிணக்கால் முதியவர் உயிரிழப்பு

எம். றொசாந்த்   / 2019 ஜனவரி 28 , பி.ப. 05:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

காணி பிணக்கு கைககலப்பாக மாறியதால் முதியவர் ஒருவர் தாக்குதலுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளார்.

கொடிகாமம் பகுதியில் இடம்பெற்ற இச்சம்பவத்தில் கொடிகாமம் வடக்கு எழுதுமட்டுவாளைச் சேர்ந்த செல்லன் சின்னத்துரை (வயது 78) என்பவரே உயிரிழந்துள்ளார்.

குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

குறித்த முதியவருக்கும், மட்டுவில் பகுதியை சேர்ந்த வேறு இருவருக்கும் இடையில் நீண்டகாலமாக காணி பிணக்கு இடம்பெற்று வந்துள்ளது. அந்நிலையில் கடந்த 19ஆம் திகதி இரு தரப்பினருக்கும் இடையில் காணி பிணக்கு ஏற்பட்டதில் வாய்த்தர்க்கம் கைக்கலப்பாக மாறியுள்ளது. அதன் போது இருவரும் இணைந்து முதியவரை பொல்லுகளால் தாக்கியுள்ளனர்.

அதில் காயமடைந்த முதியவரை அயலவர்கள் மீட்டு சாவகச்சேரி வைத்தியசாலையில் அனுமதித்தனர். பின்னர் அங்கிருந்து மேலதிக சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்தியசாலைக்கு முதியவர் மாற்றப்பட்டார். யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த முதியவர் கடந்த 4 நாட்களுக்கு முன்னர் வீடு திரும்பி இருந்தார். இந்நிலையில் நேற்று (27) ஞாயிற்றுக்கிழமை மாலை திடீரென உயிரிழந்துள்ளார்.

அதேவேளை குறித்த முதியவர் மீது தாக்குதல் மேற்கொண்ட இருவரும் அரச உத்தியோகஸ்தர்கள் எனவும்,  தாக்குதலாளிகளை பொலிஸார் கைது செய்து நீதிமன்றில் முற்படுத்திய போது, தாக்குதலுக்கு இலக்கான முதியவர் சுயநினைவற்ற நிலையில் யாழ்.போதனா வைத்திய சாலையில் சிகிச்சை பெற்றுக்கொண்டு இருந்தார் எனவும், இருந்த போதிலும் நீதிமன்றில் தாக்குதலாளிக்கு பிணை வழங்குவதுக்கு பொலிஸ் தரப்பில் ஆட்சேபனை தெரிவிக்கவில்லை என உயிரிழந்துள்ள முதியவரின் உறவினர்கள் தெரிவித்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X