2025 மே 10, சனிக்கிழமை

காணியை அடையாளம் காண அங்கிகாரம்

Editorial   / 2018 ஜூன் 18 , பி.ப. 05:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.குகன்

நல்லூர் பிரதேசசபையின் சுற்றுலாத்துறை அபிவிருத்திக்கு, அரியாலை கிழக்கு கடற்கரை பகுதியில் காணியை அடையாளம் காண, சபை அங்கிகாரம் வழங்கியுள்ளது.

நல்லூர் பிரதேச சபையின் மூன்றாவது அமர்வு, சபை மண்டபத்தில் தவிசாளர் த.தியாகமூர்த்தி தலைமையில் அண்மையில் நடைபெற்றது.

இதன் போது கருத்துத் தெரிவித்த தவிசாளர்,

பிரதேசசபையின் சுற்றுலாத்துறையை அபிவிருத்தி செய்யும் நோக்கில், அரியாலை கிழக்கு கடற்கரை பிரதேசம் இனங்காணப்பட்டுள்ளதாகத் தெரிவித்த அவர், இவ்வாறு இனங்காணப்பட்ட பகுதிகளில் உள்ள அரச காணி மற்றும் தனியார் காணிகளில் இருந்து, சுற்றுலாத்துறைக்கு பொருத்தமான காணியை அடையாளப்படுத்த சுற்றுலா அபிவிருத்திக் குழு, சபையின் அங்கிரத்தை கோரியுள்ளதாகவும் எனவே, சபை அங்கிகாரம் கோரப்படுகின்றதெனவும் குறிப்பிட்டார்.

இதற்கு அனைத்து உறுப்பினர்களும் ஆதரவை வழங்கியதையடுத்து, அரியாலை கிழக்கு கடற்கரை பகுதியில், காணியை அடையாளம் காண, சபை அங்கிகாரம் வழங்கியது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X