Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 15, செவ்வாய்க்கிழமை
எஸ்.றொசேரியன் லெம்பேட் / 2018 ஜூலை 09 , பி.ப. 05:34 - 0 - {{hitsCtrl.values.hits}}
முசலி தேசிய பாடசாலையில் இடம்பெறவிருந்த பிரதியமைச்சர் காதர் மஸ்தானின் வரவேற்பு நிகழ்வுக்கு, எழுத்து மூலம் முழுமையான அனுமதி வழங்கப்பட்டதாக, மன்னார் வலயக் கல்விப் பணிப்பாளர் திருமதி சுகந்தி செபஸ்தியன் தெரிவித்தார்.
பிரதியமைச்சர் காதர் மஸ்தானை வரவேற்கும் நிகழ்வு, முசலி தேசியப் பாடசாலையில், சனிக்கிழமை (07) இடம்பெறவிருந்த நிலையில், மன்னார் வலயக் கல்விப் பணிமனை உரிய அனுமதியை வழங்கியதா என அவரிடம் வினவியபோதே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இது தொடர்பில், தொடர்ந்து கருத்துரைத்த அவர்,
பிரதியமைச்சர் காதர் மஸ்தானை வரவேற்கும் நிகழ்வு, சனிக்கிழமை (07) காலை முசலி தேசியப் பாடசாலையில் இடம்பெறவிருந்த நிலையில், ஏற்பாட்டுக் குழுவினரால் உரிய முறையில் மன்னார் வலயக் கல்விப் பணிமனையில் அனுமதி கோரப்பட்டதாகவும்
அவர்களின் எழுத்து மூல கோரிக்கைக்கு அமைவாக அனுமதி வழங்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.
பிரதியமைச்சர் ஒருவரை வரவேற்கும் நிகழ்வு ஒன்றுக்கு அனுமதி வழங்க முடியுமெனக் குறிப்பிட்ட அவர், ஆனால் அந்த அனுமதி பாடசாலையின் அன்றைய நிலைமையைக் கருத்தில் கொண்டே வழங்கப்படுமெனவும் தெரிவித்தார்.
முசலி தேசியப் பாடசாலை அதிபருக்கு, ஏற்பாட்டுக் குழுவினரால் அனுமதி கடிதம் வழங்கப்பட்டதாகக் குறிப்பிட்ட அவர், குறித்த கடிதத்தை அப்பாடசாலையின் அதிபர் உறுதிபடுத்தி, மன்னார் வலயக் கல்விப் பணிமனைக்கு அனுப்பி வைத்துள்ளாரெனவும் குறித்த அனுமதிக்கு அமைவாகவே, மன்னார் வலயக் கல்விப் பணிமனை அனுமதியை வழங்கியுள்ளதாகவும் தெரிவித்தார்.
ஆனால், இறுதி நேரத்தில், குறித்த நிகழ்வு நிறுத்தப்பட்டமைக்கு, பாடசாலை நிர்வாகமே, பொறுப்பு கூற வேண்டுமெனக் குறிப்பிட்டார்.
அத்துடன், மன்னார் வலயக் கல்விப் பணிமனையின் உரிய அனுமதி கிடைக்காததன் காரணத்தாலேயே, குறித்த நிகழ்வை நடத்த அனுமதிக்கவில்லை என அப்பாடசாலையின் அதிபர் தெரிவித்த கருத்து உண்மைக்குப் புறம்பானதென, அவர் மேலும் தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
14 Jul 2025
14 Jul 2025
14 Jul 2025