Freelancer / 2022 செப்டெம்பர் 14 , மு.ப. 09:58 - 0 - {{hitsCtrl.values.hits}}
செந்தூரன் பிரதீபன்
யாழ்ப்பாணம் - கலட்டி பகுதியில், காதலன் கண்டித்ததினால் காதலியான ஆசிரியை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
இதில் 24 வயதுடைய சிவகுமாரன் நிருத்திகா என்ற ஆசிரியையே நேற்று உயிரிழந்துள்ளார் என பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த ஆசிரியை, தனது காதலனுக்கு தெரியாமல் நண்பி ஒருவரின் திருமண வீட்டுக்கு சென்றுள்ளார்.
காதலன் பலதடவை தொலைபேசி அழைப்பை எடுத்திருந்த போதும், அவர் தொலைபேசி அழைப்புக்கு பதிலளிக்கவில்லை.
பின்னர் குறித்த ஆசிரியை திருமண வீட்டுக்கு சென்ற சம்பவத்தினை தெரிவித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த காதலன் ஒரு வாரத்துக்கு வீட்டை விட்டு வெளியில் செல்லக்கூடாது என கண்டித்துள்ளார்.
இதனால் மனவிரக்தி அடைந்த ஆசிரியை தவறான முடிவு எடுத்து உயிரிழந்துள்ளதாக யாழ்ப்பாணம் பொலிஸார் தெரிவித்தனர். இந்த ஆசிரியையின் உயிரிழப்பு ஆறு வருட காதலுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளது.
சடலம் யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.
இறப்பு விசாரணையினை யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிரேம்குமார் மேற்கொண்டார். (R)
32 minute ago
33 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
32 minute ago
33 minute ago