Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Freelancer / 2021 செப்டெம்பர் 25 , மு.ப. 09:49 - 0 - {{hitsCtrl.values.hits}}
செ.கீதாஞ்சன்
யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பிற்கு சென்ற காரில் கஞ்சா கடத்தி சென்றமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
ஏ9 வீதியில் மாங்குளம் பகுதியில் வைத்து குறித்த காரை சோதனையிட்ட பொலிஸார் 6 கிலோ கஞ்சாவுடன் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் உள்ளிட்ட மூவரை கைது செய்துள்ளார்கள்.
இவர்கள் கடத்தலுக்கு பயன்படுத்திய காரும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
புத்தளத்தினை சேர்ந்த 34 வயதுடைய பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரும் மற்றும் நெச்சிகாம பகுதியினை சேர்ந்த 25 வயதுடைய நபரும் யாழ்ப்பாணம் கொடிகாமம் பகுதியினை சேர்ந்த 32 வயதுடைய நபருமே கைது செய்யப்பட்டுள்ளார்கள்.
இவர்களிடம் முறைப்பாடு பதிவுசெய்யப்பட்டு விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸார் இன்று முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளார்கள். R
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .