2025 ஓகஸ்ட் 26, செவ்வாய்க்கிழமை

காற்றால் பாதிக்கப்பட்ட வீடுகளின் உரிமையாளர்களுக்கு 10 ஆயிரம் ரூபாய்

எம். றொசாந்த்   / 2020 மே 28 , பி.ப. 08:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

யாழ்ப்பாணத்தில் வீசிய கடும் காற்றின் காரணமாக சேதமடைந்த வீடுகளைச் சேர்ந்த 123 குடும்பங்களுக்க, தலா 10 ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டுள்ளதாக யாழ்ப்பாண மாவட்ட செயலர் க.மகேசன் தெரிவித்துள்ளார். 

மாவட்ட செயலகத்தில், இன்று (28) ஊடகவியலாளர்களைச் சந்தித்து கருத்துத் தெரிவிக்கும் போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது,

கடந்த வாரம் ஏற்பட்ட ஆம்பன் சூறாவளி காரணமாக ஏற்பட்ட கடும் காற்றால், 130 குடும்பங்களைச் சேர்ந்தவர்கள், தங்களது வீடுகளை முழுமையாகவும் பகதியளவிலும் இழந்துள்ளனர் என்று தெரிவித்தார்.

இந்நிலையில், அவர்களுடைய விவரங்கள் பெறப்பட்டு, முற்பணமாக 10 ஆயிரம் ரூபாய் வழங்குவதற்குரிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வந்தது என்றும் 7 குடும்பங்களைத் தவிர அனைவருக்கும் 10 ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டுள்ளது என்றும் அவர் கூறினார்.

இதேவேளை, காற்று காரணமாக பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஏற்பட்ட இழப்புகளை மதிப்பீடு செய்து, அவற்றை விவசாய அமைச்சுக்கு அனுப்பியுளள்தாகவும் இது தொடர்பான சாதகமான முடிவுகளை எதிர்பார்த்திருப்பதாகவும் அவர் கூறினார்.

இதேவேளை, முல்லைத்தீவு மாவட்டத்தில் ஏற்பட்ட கடும் காற்றால் பாதிக்கப்பட்ட 64 வீடுகளின் உரிமையாளர்களுக்கு, தேசிய அனர்த்த நிவாரண சேவைகள் மய்யத்தால், முதற்கட்டமாக, நிவாரண உதவிகள், இன்று (28) வழங்கப்பட்டன.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X