Editorial / 2020 ஜூன் 15 , பி.ப. 07:58 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எம்.றொசாந்த், செந்தூரன் பிரதீபன்
யாழ்ப்பாணம் – கோப்பாய், கைதடி வீதியில் பயணித்துக்கொண்டிருந்த வயோதிபர் ஒருவர், காற்றில் தூக்கி வீசப்பட்டு உயிரிழந்துள்ளார்.
இவ்வாறு உயிரிழந்தவர், கோப்பாய் பகுதியைச் சேர்ந்த சந்திரசேகர் சரவணமுத்து (வயது 80) என்பவராவார்.
வௌ்ளிக்கிழமையன்று (05), அந்த வயோதிபர், தனது மகனுடன் மோட்டார் சைக்கிளில் பயணித்துக்கொண்டிருந்த போது, திடீரென வீசிய கடும் காற்றால் மோட்டார் சைக்கிள் நிலைக்குலைந்துள்ளது. இதன்போது, மோட்டார் சைக்கிளின் பின் ஆசனத்தில் அமர்ந்திருந்த வயோதிபர் தூக்கி வீசப்பட்டு, படுகாயங்களுக்குள்ளானார்.
படுகாயமடைந்த வயோதிபரை, யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை (14) சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
2 hours ago
3 hours ago
4 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
3 hours ago
4 hours ago
5 hours ago