Freelancer / 2023 பெப்ரவரி 03 , பி.ப. 03:23 - 0 - {{hitsCtrl.values.hits}}
யாழ். சாவகச்சேரி காளி கோவில் மற்றும் அதனோடு அமைந்துள்ள வாகன திருத்து நிலையம் ஆகியன இன்று அதிகாலை 2 மணி அளவில் உடைக்கப்பட்டு கொள்ளையிடப்பட்டுள்ளன.
இதன் போது கடவுளுக்கு அணிவிக்கப்பட்டு இருந்த ஒன்றரைப் பவுண் தங்க ஆபரணங்களும், உண்டியலில் இருந்த 35,000 ரூபா பணமும், ஆலயத்தில் இருந்த அரிசி மூடைகள் மூன்றும் கொள்ளையிடப்பட்டுள்ளன.
இதேவேளை வாகன திரித்து நிலையத்தில் வைக்கப்பட்டிருந்த 450,000 லட்சம் ரூபாய் பணமும் கொள்ளையிடப்பட்டுள்ளது .
குறித்த ஆலயத்தில் இடம் பெற்று வந்த வருடாந்த மாகோற்சபம் நேற்றைய தினம் நிறைவடைந்த நிலையிலேயே இந்த கொள்ளை சம்பவம் இடம்பெற்றுள்ளது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை சாவகச்சேரி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். R



21 minute ago
37 minute ago
46 minute ago
50 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
21 minute ago
37 minute ago
46 minute ago
50 minute ago