Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2017 ஜூலை 05 , பி.ப. 08:22 - 0 - {{hitsCtrl.values.hits}}
“கிட்டு முன்பள்ளி என்ற பெயரே, இராணுவத்தின் நெருக்குதல் காரணமாக, மகாத்மா முன்பள்ளி என்று பெயர் மாற்றப்பட்டிருக்கிறது. மகாத்மா காந்தியின் இலக்கும் கிட்டுவின் இலக்கும் ஒன்றுதான். அவரவர் தேசங்களின் விடுதலையே, அவர்களின் இலட்சியங்களாக இருந்தது.
ஆனால், இரண்டு பேரும் இலட்சியங்களை அடைவதற்காக, ஆட்சியாளர்களுடன் பேசிய மொழி வெவ்வேறானது” என்று வட மாகாணசபையின் முன்னாள் விவசாய அமைச்சர் உறுப்பினர் பொ.ஐங்கரநேசன் தெரிவித்துள்ளார்.
சாவற்கட்டு மகாத்மா மைதானத்தில் நடைபெற்ற, மகாத்மா முன்பள்ளியின் விளையாட்டு நிகழ்ச்சியில் பிரதம விருந்தினராகக் கலந்து கொண்டு உரையாற்றியபோதே பொ.ஐங்கரநேசன், இன்று (05) இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
“மகாத்மா காந்தி அஹிம்சை மொழியில் பேசினார். அதனை, இந்தியாவை ஆண்ட பிரித்தானியர்கள் புரிந்து கொண்டார்கள். அவரைப் பின்பற்றி, ஈழத்துக் காந்தி செல்வநாயகமும் சிங்கள ஆட்சியாளர்களுடன் அஹிம்சை மொழியிலேயே பேசினார். ஆனால், மகாத்மாக்களின் மொழியைப் சிங்களப் பேரினவாதிகள் புரிந்து கொள்ளவில்லை. புரிந்து கொள்ள மறுத்தார்கள். இதனால்தான் ஆயுதப் போராட்டம் உருக் கொண்டது. கிட்டுகள் தோன்றி வேறு மொழியில் பேசத் தொடங்கினார்கள்.
ஆயுதப் போராட்டம் தோற்கடிக்கப்பட்ட பின்பு, அவ்வாறான போரட்டம் ஒன்று இங்கு நடைபெற்றதற்கான அடையாளங்கள் எதுவும் எஞ்சிவிடக் கூடாது என்பதில் அரசாங்கம் கண்ணுங் கருத்துமாக இருக்கிறது. அதனால்தான் கிட்டு முன்பள்ளி, மகாத்மா முன்பள்ளியாகப் பெயர் மாற்றப்பட்டது. ஈழம் என்ற சொல்லைக்கூட அரசாங்கம் ஏற்றுகொள்ளத் தயாராக இல்லை. ஈழம் விடுதலைப் புலிகளின் கண்டுபிடிப்பல்ல. அது இலங்கையின் பண்டைய பெயர். அண்மையில், கிளிநொச்சியில் திருவள்ளுவர் சிலையொன்றின் பீடத்தில் இருந்த ஈழம் என்ற சொல் இராணுவத்தினரின் கெடுபிடிகள் காரணமாக அகற்றப்பட்டிருக்கிறது. இவற்றை நாங்கள் யாராவது சுட்டிக் காட்டினால், அரசியல் அரங்கில் இருந்து எங்களை அகற்றவும் எம்மவர் சிலரின் துணையோடு அரசாங்கம் முயலுகின்றது.
தமிழ் மக்களிடையே ஆயுதப் போராட்டம் முளை விட்டதற்கான காரணங்கள் இன்னமும் அப்படியே உள்ளன. அரசாங்கம் இடது கையில் தூக்கிய கத்தியைத் தனது முதுகுக்குப் பின்னால் மறைத்து வைத்துக் கொண்டே, இனி சமாதானம் என்று சொல்லி, வலது கையால், எங்களுடன் கைகுலுக்கப் பார்க்கிறது. இதுபற்றி விழிப்புணர்வு எங்களுக்கு இல்லாவிடில், நாம் தொடர்ந்தும் எமாற்றப்படுவோம். ஆயுதங்களை நாம் மீளவும் தூக்க வேண்டாம். ஆனால், ஆயுதப் போராட்டம் நடைபெற்றதற்கான காரணங்களை, ஆயுதப் போராட்டத்தின் அளப்பரிய தியாகங்களை யாரும் மறந்துவிடக் கூடாது. எமது இளைய தலைமுறையினரிடம் இவை எடுத்துச் சொல்லப்பட வேண்டும்” என்றார்.
7 hours ago
8 hours ago
8 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
8 hours ago
8 hours ago
9 hours ago