Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 06, செவ்வாய்க்கிழமை
Princiya Dixci / 2021 ஜூலை 10 , மு.ப. 09:03 - 0 - {{hitsCtrl.values.hits}}
சுப்பிரமணியம் பாஸ்கரன்
கிளிநொச்சி, கிராஞ்சி பகுதியில் இறங்குதுறை, வெளிச்ச வீடு இன்மை மற்றும் கடலட்டைப் பண்ணைகள் என்பவற்றால் தங்களுடைய கடற்றொழில் நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டிருப்பதாக கிராஞ்சி கடற்றொழிலாளர்கள் தெரிவிக்கின்றனர்.
இங்கு சுமார் 200க்கும் மேற்பட்ட கடற்றொழிலாளர்கள் உள்ளனர். குறிப்பாக, இந்தப் பிரதேசத்தில் சிறு கடற்றொழில் மற்றும் ஆழ்கடல் நடவடிக்கைகளிலும் இவர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
தங்களுடைய படகுகளை நிறுத்தி வைப்பதற்கும் படகுகளை தொழிலுக்குக் கொண்டு சென்று, கரை சேர்ப்பதற்கும் ஏற்ற வகையில் இறங்குதுறைகள் இல்லாமையால் பல்வேறு சிரமங்களை எதிர்கொள்வதாக அவர்கள் தெரிவிக்கின்றனர்
அத்துடன், புரெவிப் புயல் காரணமாக தமது படகுகள் மற்றும் மீன்பிடி உபகரணங்களும் சேதமடைந்தன எனவும் தெரிவித்ததுடன், தங்களுடைய பிரதேசங்களிலே அட்டை தொழில் வளர்ப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
இந்த அட்டை பண்ணைகள் பல, சிறுகடல் பகுதிப் போக்குவரத்துப் பாதைகளில் காணப்படுவதால், தாம் பல்வேறு சிரமங்களை எதிர்கொள்வதாகவும் அவர் தெரிவிக்கின்றனர்.
எனவே, தமது கடற்றொழிலை பாதுகாப்பாகத் தொடர்ந்தும் முன்னெடுக்க வழிவகைகளை ஏற்படுத்தித் தருமாறு, கிராஞ்சி கடற்றொழிலாளர்கள் வேண்டிநிற்கின்றனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 minute ago
15 minute ago
1 hours ago
1 hours ago