Freelancer / 2022 ஜூன் 13 , பி.ப. 02:39 - 0 - {{hitsCtrl.values.hits}}
மு. தமிழ்ச்செல்வன்
கிளிநொச்சி மாவட்டத்தில் அரிசி ஆலைகள் மற்றும் அரிசி விற்பனை நிலையங்களில் நேற்று (12) திடீர் சோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
இதன்போது கட்டுப்பாட்டு விலையிலும் பார்க்க கூடிய விலையை அச்சிட்ட அல்லது காட்சிப்படுத்திய அரிசி ஆலை உரிமையாளர் மற்றும் கூடிய விலையில் அரிசியை விற்பனை செய்த விற்பனையாளர்களுக்கு எதிராகவும், மற்றும் விலையை காட்சிப்படுத்தாது அரிசி விற்பனையில் ஈடுபட்ட வர்த்தகர்களுக்கு எதிராகவும் சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
எதிர்வரும் நாட்களிலும் அரிசி விற்பனை விலை தொடர்பான திடீர் சோதனைகள் முன்னெடுக்கப்பட்டு, முறைகேடுகளில் ஈடுபடும் வியாபாரிகளுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபையினர் தெரிவித்துள்ளனர்.
அதேவேளை அதிகளவான நெல்லினை இருப்பில் வைத்துள்ள போதிலும் அதனை அரிசியாக்கி சந்தைக்கு விநியோகம் செய்ய மறுக்கும் பதுக்கல் நடவடிக்கைகளுக்கு எதிராக உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளது.
பொதுமக்கள் அரிசி கொள்வனவின் போது விலை தொடர்பில் அவதானம் செலுத்துவதுடன்
முறைகேடான வியாபார நடவடிக்கைகள் தொடர்பில் மாவட்ட பாவனையாளர் அலுவல்கள்
அதிகார சபைக்கு முறைப்பாடு செய்யுமாறும் அல்லது பாவனையாளர் அலுவல்கள்
அதிகார சபை துரித சேவை இலக்கமான 1977 ஊடாகவும் முறைப்பாடுகளை வழங்க
முடியும் பாவனையாளர் அலுவலக்ள் அதிகார சபையினர் தெரிவித்துள்ளனர். (R)



41 minute ago
1 hours ago
1 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
41 minute ago
1 hours ago
1 hours ago
3 hours ago