2025 ஜூலை 07, திங்கட்கிழமை

கிளிநொச்சியில் ஒருவர் வெட்டிப் படுகொலை

Editorial   / 2019 மார்ச் 05 , மு.ப. 11:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

மு.தமிழ்ச்செல்வன்

கிளிநொச்சி உதயநகர் கிழக்கு பகுதியில் ஒருவர் இன்று (05) காலை வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

கூட்டுறவு காப்புறுதி நிறுவனத்தின் கிளிநொச்சி கிளை முகாமையாளரான காந்தலிங்கம் பிறேமரமணன் (வயது 32) என்பரே கொலை செய்யப்பட்டுள்ளார். வவுனியா வேப்பங்குளத்தை சேர்ந்த இவர் ஒரு பிள்ளையின் தந்தை எனவும் தெரிவிக்கப்படுகிறது.

உதயநகர் கிழக்கில் தங்கியிருக்கும் குறித்த நபர், இன்று (05) காலை தனது அலுவலகப் பணிப்பாளருடன் அலுவலகத்துக்குப் புறப்படும்போதே  மோட்டார் சைக்கிளில் வந்த ஒருவர் சரமாரியாக வெட்டியுள்ளார்.

தலை, கை, கால் மற்றும் உடம்பில் வெட்டுக்காயங்களுக்குள்ளான அவர் வைத்தியசாலைக்கு கொண்டு செல்ல முன் உயிரிழந்துள்ளார்.

மேலதிக விசாரணைகளை கிளிநொச்சி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .