2025 ஜூலை 09, புதன்கிழமை

கிளிநொச்சியில் படைப்புழு விழிப்புணர்வுப் பேரணி

Editorial   / 2019 ஜனவரி 31 , பி.ப. 01:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

மு.தமிழ்செல்வன்     

இதுவரை காலமும் இலங்கையில் கண்டுபிடிக்கப்படாத பீடையான படைப்புழு பற்றிய விழிப்புணர்வு பேரணி ஒன்று இன்று (31) கிளிநொச்சியில் இடம்பெற்றுள்ளது.

இன்று (31) காலை கிளிநொச்சி கரடி போக்கு சந்தியிலிருந்து டிப்போச் சந்தி வரை இப்பேரணி இடம்பெற்றது.

விவசாய திணைக்களத்தினர், கமநல சேவைகள் திணைக்களத்தினர், யாழ் பல்கலைக்கழகத்தின்  விவசாய பீட மாணவர்கள் விவசாயிகள் ஆகியோர் இப்பேரணியில் கலந்துகொண்டனர்.

சோளம், இறுங்கு, கரும்பு, நெல், மரக்கறிகள், பழங்கள், அவரைப் பயிர்கள், உட்பட நூற்றுக்கு மேற்பட்ட பயிர்களை அழிக்க கூடிய பீடை இதுவாகும். எனவே இது தொடர்பான விழிப்புணர்வுகளை விவசாயிகள் மற்றும் பொது மக்களுக்கு ஏற்படுத்தும் வகையில் இப் பேரணி இடம்பெற்றுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .