Niroshini / 2021 நவம்பர் 02 , பி.ப. 03:43 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எஸ். நிதர்ஷன்
யாழ்ப்பாணம் - கீரிமலை பகுதியில், கடற்படையினருக்கு காணி அளவிடும் நடவடிக்கை, பொதுமக்கள் மற்றும் அரசியல் பிரமுகர்களால், இன்று (02) முறியடிக்கப்பட்டது.
காணி உரிமையாளரின் ஒப்புதல் இல்லாமல் கீரிமலை - நகுலேஷ்வரம், ஜே/226 கிராம சேவகர் பிரிவில், காணிகளை சுவீகரிப்பதற்கான அளவீட்டு நடவடிக்கைகளை மேற்கொள்ளும் திட்டமொன்று, இன்று (02), நில அளவை திணைக்களத்தால் திட்டமிடப்பட்டிருந்தது.
இருப்பினும், அங்கு ஒன்றுகூடிய காணி உரிமையாளர்கள், அரசியல் பிரமுகர்கள் மற்றும் பொதுமக்களின் எதிர்ப்பு நடவடிக்கைகளை தொடர்ந்து, காணி அளவீட்டு நடவடிக்கைகளை தற்காலிகமாக கைவிட்டுவிட்டு செல்வதாக கூறிவிட்டு, நிலஅளவைத் திணைக்களம் அவ்விடத்தில் இருந்து சென்றது..

6 hours ago
7 hours ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
7 hours ago
8 hours ago