2025 ஓகஸ்ட் 31, ஞாயிற்றுக்கிழமை

கீரிமலையில் காணி சுவீகரிக்கும் முயற்சி தடுத்து நிறுத்தம்

Editorial   / 2021 டிசெம்பர் 17 , மு.ப. 11:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

வலிவடக்கு பிரதேசத்தின் பகுதியில் காணி சுவீகரிப்பு நடவடிக்கைகளுக்கு எதிராக மழைக்கு மத்தியிலும் இன்றைய தினம் ஆர்ப்பாட்டம் ஒன்று மேற்கொள்ளப்பட்டது.

இன்று காலை 9 மணியளவில் கீரிமலை ஜே/226,காங்கேசன்துறை மேற்கு,ஜே/223 பகுதிகளில் 21 பேருக்கு சொந்தமான 30 ஏக்கர் காணிகளை படையினருக்கு சுவீகரிக்க நில அளவைத் திணைக்களத்தினால் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்ட நிலையில் இன்றைய தினம் எதிர்ப்பு போராட்டம் மேற்கொள்ளப்பட்டது.

இதன்போது காணி உரிமையாளர்கள், அரசியல்வாதிகள், பொதுமக்கள் எனப்பலரும் எதிர்ப்பு நடவடிக்கை மேற்கொண்டனர்.

இந்நிலையில் நில அளவை திணைக்களத்தினர் காணி அளவீடு நடவடிக்கையை கைவிட்டு திரும்பிச் சென்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X