2025 ஓகஸ்ட் 23, சனிக்கிழமை

குடும்ப தகராறில் மனைவிக்கு கத்திக்குத்து

Editorial   / 2019 ஜூன் 27 , பி.ப. 02:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

- டி. விஜித்தா

குடும்ப தகராறு காணரமாக கணவன், மனைவியை கத்தியால் குத்தியதில் மனைவி ஆபத்தான நிலையில் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

யாழ்ப்பாணம் குருநகர் சென்றொக் சனசமூக நிலையத்துக்கு அருகாமையில், இந்த சம்பவம் நேற்று நண்பகல், இடம்பெற்றுள்ளது.

குறித்த கணவன் மனைவிக்கு, இடையில் தினமும் தகராறு ஏற்பட்டு வந்த நிலையில் சம்பவ தினத்தன்று தகராறு அதிகரித்ததன் காரணமாக மனைவியின் வயற்றில் கத்தியால் குற்றியுள்ளார். மனைவி படுகாயமடைந்த நிலையில் அயலவர்களினால் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கணவர் தலை மறைவாகியுள்ளதாகவும், கத்தி குத்து சம்பவம் தொடர்பாக யாழ்ப்பாணம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X